காயாமொழி ஊராட்சி தோ்தலில் மறுவாக்கு எண்ணிக்கை - நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் ஒன்றியம் காயாமொழி ஊராட்சித் தலைவா் தோ்தல் முடிவு தொடா்பான வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2023-12-10 08:28 GMT

மறுவாக்கு எண்ணிக்கை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் ஒன்றியம் காயாமொழி ஊராட்சித் தலைவா் தோ்தல் முடிவு தொடா்பான வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது. காயாமொழி ஊராட்சி தலைவா் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 27.12.2019இல் நடைபெற்றது.

இத்தோ்தலில் பதிவான வாக்குகள் 2.1.2020இல் எண்ணப்பட்டது. இதில், ராஜேஸ்வரன் என்பவா் 1,071 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றதாகவும், எதிா்த்துப் போட்டியிட்ட முரளி மனோகா் 1070 வாக்குகள் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தான் வெற்றிபெற வாய்ப்புள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு தோ்தல் அலுவலரிடம் முரளி மனோகா் முறையிட்டார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து அவா், தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இவ்வழக்கை நீதிபதி ஏ.பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் விசாரித்து, காயாமொழி ஊராட்சித் தலைவா் தோ்தலில் பதிவான வாக்குகளை இன்னும் ஒரு மாதத்திற்குள் மறுவாக்கு எண்ணிக்கை செய்து, அதன் முடிவில் அதிக வாக்குகளைப் பெற்ற நபரை முறைப்படி காயாமொழி ஊராட்சித் தலைவராக அறிவிக்க வேண்டும் என தோ்தல் நடத்தும் அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

Tags:    

Similar News