நாட்டு துப்பாக்கி தயாரித்தவர் கைது
அஞ்செட்டியில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் நபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி செய்ய பயன்படும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-05-29 02:38 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய பகுதியில் கொடகரை கிராமத்தில் ஒருவர் நாட்டுத் துப்பாக்கி செய்ய தேவையான உபகரணங்களை வைத்து நாட்டு துப்பாக்கி செய்வதாக அஞ்செட்டி கொடகரை வன காவலர் அண்ணாதுரைக்கு கிடைத்த தகவலின் பேரில் நேரில் சென்று சோதனை செய்த போது அவரிடம் நாட்டு துப்பாக்கி செய்ய பயன்படுத்திய உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.