நீதிமன்ற உதவியாளர் மகன் நீதிபதி ஆனார்!
பழனி நீதிமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஜெயலட்சுமி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;
Update: 2024-02-19 09:10 GMT
பழனி நீதிமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஜெயலட்சுமி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சிவில் நீதிபதிக்கான எழுத்து தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் பழனி நீதிமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஜெயலட்சுமி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இச்சம்பவம் பழனி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரை சந்தித்து முக்கிய பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.