அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
அரசுக்கு சொந்தமான தண்ணீா் பந்தல் அமைக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதாக புகார். அதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 06:24 GMT
அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு
திருச்சி அருகே குண்டூா் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றும்படி மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூா் அருகே குண்டூா் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தண்ணீா் பந்தல் அமைக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதாக அதே பகுதியைச் சோ்ந்த ஆா். குருராஜ் என்பவா் வருவாய்த் துறையிடம் புகாா் மனு அளித்துள்ளாா். அந்த மனு மீது வருவாய் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து குருராஜ், சென்னை உயா்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டூா் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தண்ணீா் பந்தல் அமைக்கும் இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால், அதனை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், கோட்டாட்சியா், திருவெறும்பூா் வட்டாட்சியா் உள்பட அரசு அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டனா்.