விராலிமலையில் தலைவர்கள் சிலைகள் மறைப்பு!
புதுக்கோட்டை தேர்தல் எதிரொலி விராலிமலையில் தலைவர்கள் சிலைகள் மறைப்பு.
Update: 2024-03-20 05:32 GMT
புதுகோட்டை விராலிமலை பகுதிகளில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலைகளை தொடர்புடைய அமைப்பினர் மறைக்காததால் ஊராட்சி நிர்வாகத்தினர் சாக்கு பைகளைச் சுற்றி சிலைகளை மறைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், விராலிமலை சட்டப்பேரவை அலுவலகம் சனிக்கிழமை பூட்டப்பட்டது.இதைத் தொடர்ந்து நகர்ப் பகுதி முழுவதும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் தொடர்பான பதாகைகளை அகற்றிக் கொள்ளுமாறும், தலைவர்கள் சிலைகளை துணிகள் கொண்டு மறைத்து வைக்குமாறு தேர்தல் அலுவலர்கள் அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், அகற்றிக் கொள்ளாத கட்சிப் பதாகைகள், விளம்பரங்களை அகற்றும் பணியில் விராலிமலை ஊராட்சிமன்றமேஸ்திரி ஆறுமுகம் தலைமையில் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை நகர்ப் பகுதி முழுவதும் சென்று பதாகைகளை மறைத்தும், அகற்றியும் வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விராலிமலை திருச்சி சாலை காமராஜர் நகர் பகுதியில் ஜல்லிக்கட்டு சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள தலைவர்கள் சிலையை சாக்குப் பைகள் கொண்டு மறைத்தனர்.