மின்னல் தாக்கி பசு மாடு சாவு!
ராணிப்பேட்டை அருகே மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
பசுமாடு உயிரிழப்பு
ராணிபேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள அல்லாளச்சேரி மந்தைவெளி தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் கட்டி பராமரித்து வந்தார். இந்த நிலையில் பகல் 3 மணியளவில் இடி- மின்னலுடன் மழைபெய்தது. அப்போது மாடுகட்டப்பட்டிருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.
தென்னை மரத்திலும் தீ பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ ஆகியோர் கால்நடை மருத்துவருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கால்நடை மருத்துவர் சென்று பசு மாட்டை பிரேத பரிசோதனை செய்தார்.