மின்கம்பம் முறிந்து விழுந்து மாடு உயிரிழப்பு - விவசாயிக்கு சிகிச்சை
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கோனானூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வேளானந்தல் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவர் தன்னுடைய விவசாயி நிலத்தை முறைப்படுத்த உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விளைநிலத்தில் பழுது ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பம் முறிந்து உழவு பணியில் ஈடுபட்டிருந்த மாடுகள் மீது விழுந்ததில் உழவு மாடு மின் கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தது. விவசாயி சக்தி மின்சாரம் தாக்கி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த உழவுமாட்டை கால்நடை உதவி மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர்.விவசாயி சக்திக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.