50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசு மாடு - மீட்ட தீயணைப்பு வீரர்கள்

லால்குடி அருகே மேலப்பழுர் கிராமத்தில் 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

Update: 2024-05-08 02:55 GMT

மீட்கப்பட்ட பசுமாட்டுடன் தீயணைப்பு வீரர்கள்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே அரியலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட மேலப்பழுர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் பசு மாடுகள் மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது அங்குள்ள 50 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் மேச்சலுக்கு சென்ற பசு மாடு எதிர்பாரத விதமாக தவறி விழுந்தது.

இதுகுறித்து சென்னையில் உள்ள தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த புள்ளபாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நிலைய அலுவலர் போக்குவரத்து மகேந்திரன், சிறப்பு நிலைய அலுவலர் பாரதி மற்றும் வீரர்கள் அஜித்குமார், கனகராஜ், அமுதகுமார், பிரகாஷ், ஜானி பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்ட பசுமாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News