போச்சம்பள்ளி அருகே பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி

போச்சம்பள்ளி அருகே மூன்று லட்சம் மதிப்பிலான பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானது.

Update: 2024-02-16 04:57 GMT

போச்சம்பள்ளி அருகே மூன்று லட்சம் மதிப்பிலான பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி : மின் பராமரிப்பு பணிகளை செய்யாததே இந்த மின்விபத்துக்கு காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு : பலியான மாடுகளுக்கு உரிய இழப்பீடுகள் வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மேட்டுப்புலியூர் அருகே உள்ள சாராகாரனூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது மனைவி மாது மற்றும் காளியப்பன் என்பவரது மகன் குமரேசன் ஆகியோர் கால்நடைகளை வைத்து பராமரிப்பு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு மாடுகளுக்கு தேவையான தீவனங்களை வைத்துவிட்டு வீட்டிற்கு தூங்கச் சென்றுள்ளனர், இந்நிலையில் இரவு சுமார் 4 மணியளவில் மாடுகள் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளனர் அப்பொழுது மின் கம்பி அறுந்து மாடுகளின் மீது விழுந்து தீப்பற்றி எறிந்துள்ளது, மேலும் மாடுகள் கதறி சத்தமிட்டு உள்ளது பின்னர் மின்சார கம்பிகள் அருந்து விழுந்ததால் செய்வதறியாமல் தவித்துள்ளனர். பின்னர் பாரூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த பாரூர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த மின்விபத்தின் காரணமாக சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் காலை வேலையில் பள்ளிகளுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு தேவையான உணவுகளை செய்ய முடியாமல் பெற்றோர் அவதியுற்றனர்.

மேலும் இது குறித்து விவசாயிகள் கூறுகையி்ல் மின்சாரத் துறையினர் மாதந்தோறும் மின்சார பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறி ஒரு நாள் முழுவதும் மின் இணைப்பை துண்டிப்பு செய்கின்றனர். ஆனால் மின் பராமரிப்பு பணிகள் சீராக மேற்கொள்ளாத காரணமாகவும் மேலும் இப்பகுதியில் தென்னை மரங்கள் அதிகம் உள்ள நிலையில் தென்னை ஓலைகள் மின்கம்பிகளின் மீது உரசி அடிக்கடி மின் விபத்து ஏற்படும் நிலையில் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இப்பகுதியில் உள்ள மின்கம்பிகளுக்கு இடையே உள்ள மரம் செடிகளை அப்புறப்படுத்தாமல் மின்சாரத் துறையினர் அலட்சியம் காட்டியதன் காரணமே இந்த விபத்தில் பசுமாடுகள் இறந்ததற்கு காரணம் என்றும் இதற்கு உரிய இழப்பீடுகளை உடனடியாக வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News