Cpi(m) கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Cpi(m) கட்சியினர் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-25 09:38 GMT
திருச்செங்கோடு தொண்டிக்கரடு முதல் சூரியம்பாளையம் வரையிலான கழிவுநீர் கால்வாய் திட்டத்தை கைவிடக் கோரி CPI(M) கட்சியின் சார்பில் அண்ணா சிலை முன்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குCPM 18 வது வார்டு கிளைச் செயலாளர் S.M.சிங்காரவேல் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தார். CPM மாவட்ட செயற்குழுஉறுப்பினர் A.ரங்கசாமி சிறப்பு உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நீர் நிலைகள் கிணறுகள் பாதிக்கப்படக் கூடாதுமாற்றுப்பாதையை தேர்வு செய்து நகராட்சிதிட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Similar News