ஸ்மார்ட் மீட்டர் திட்டம் வேண்டாம் சிபிஎம் கட்சி ஆர்ப்பாட்டம்
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் வேண்டாம் சிபிஎம் கட்சி ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-16 09:50 GMT
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் வேண்டாம் சிபிஎம் கட்சி ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக் கோட்டையில் தமிழக மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் அதனை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மின்வாரிய கோட்ட பொறியாளரிடம் ஒப்படைத்தனர்.