கிரிக்கெட் லீக் போட்டி: புதுக்கோட்டை அணி வெற்றி

கிரிக்கெட் லீக் போட்டியில் புதுக்கோட்டை பெஸ்ட் கிரிக்கெட் அணியினர் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

Update: 2023-12-25 13:41 GMT

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் லீக் போட்டியில் புதுக்கோட்டை பெஸ்ட் கிரிக்கெட் அணியினர் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மைதானத்தில் புதுக்கோட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் லீக் போட்டிகள் கடந்த 4-மாத காலமாக நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் இன்று புதுக்கோட்டை பெஸ்ட் கிரிக்கெட் அணியினரும் அறந்தாங்கி தமிழன் கிரிக்கெட் அணியினருக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெஸ்ட் கிரிக்கெட் கிளப்பினர் முதலில் பேட்டிங் செய்தனர் 35 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் ஆடிய அறந்தாங்கி தமிழன் கிரிக்கெட் பணியினர் 62 ரன்களுக்கு அணைத்து விக்கெட் இழந்தார்கள். இதனால் 113 ரன்கள் வித்தியாசத்தில் புதுக்கோட்டை பெஸ்ட் கிரிக்கெட்ல பணியினர் வெற்றி பெற்றனர்... முன்னதாக பெஸ்ட் கிரிக்கெட் அணியின் வெங்கடேஸ்வரன் 29 ரன்கள் அடித்தார்... அதேபோல் அறந்தாங்கி தமிழன் கிரிக்கெட் அணியின் யோகேஷ் 17 ரன்கள் அதிகபட்சமாக அடித்தார்.

புதுக்கோட்டை பெஸ்ட் கிரிக்கெட் கிளபா அணியின் வெங்கடேஷ் நான்கு விக்கெட்டுகளையும் அறந்தாங்கி தமிழன் அணியை சேர்ந்த ஸ்ரீ ராம் 4 விக்கெட் வீழ்த்தினார்கள் முடிவில் பெஸ்ட் கிரிக்கெட் கிளப் அணியின் வெங்கடேஷ் சிறந்த ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்..

Tags:    

Similar News