திருப்பூர் சோளிபாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

சோளிபாளையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.;

Update: 2024-03-13 18:11 GMT

கிரிக்கெட் போட்டி

திருப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல் & அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி சோளிபாளையம் மைதானத்தில் தொடங்கியது. இதனை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ், வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், திருமுருகன்பூண்டி ஒன்றிய செயலாளர் எஸ்-.ஆர்.பழனிச்சாமி, திருப்பூர் தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்-.ஆர்.ராஜ், முன்னாள் நகர செயலாளர் சிவபாலன், வார்டு செயலாளர் ராம்குமார், குட்வின் செல்வம் மற்றும் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலன், மாவட்ட, மாநகர விளையாட்டு மேம்பாட்டு துணை அமைப்பாளர்கள் ராசுகுட்டி, சண்முக விக்னேஷ், சதீஷ்குமார், கார்த்திக், பிரபு, மன்சூர், சங்கீத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News