ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி !
தூத்துக்குடியில் ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 6-ம் தேதி முதல் வரும் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது இப்போட்டியில் மொத்தம் 32-அணிகள் பங்கேற்ற இருக்கின்றது இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்க பணம் மற்றும் வெற்றி கோப்பை அமைச்சர் கீதா ஜீவன் வழங்குகிறார்.
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது. இன்று 6-ம் தேதி துவங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 32-அணிகள் கலந்து கொள்கின்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இன்று துவங்கிய முதல் போட்டியில் தூத்துக்குடி பியல் சிட்டி 11s அணியும், டூட்டி லயன்ஸ் அணியும் மோதியது பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பிஎல் சிட்டி 11 அணியினர் 8ஓவர்களுக்கு 87 ரன்கள் குவித்தனர் பின்னர் இரண்டாவது பேட்டிங் செய்த டூட்டி லயன்ஸ் அணியினர் 8 ஓவருக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 28 ரன் வித்தியாசத்தில் பியல் சிட்டி 11s அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெரும் அணிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 15-ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையினை அமைச்சர் கீதா ஜீவன் வழங்குகின்றார். அதைபோல் இரண்டாவது வெற்றி பெரும் அணிக்கு 10-ஆயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பையினை Delight public school நிர்வாகம் வழங்குகின்றது.
அதைபோல் மூன்றாது வெற்றி பெரும் அணிக்கு 8-ஆயிரம் ரூபாய் மற்றும் வெற்றி கோப்பையினை முகமது சேக் மைதீன் வழங்குகின்றார் மேலும் நான்காவது வெற்றி பெரும் அணிக்கு 5-ஆயிரம் ரூபாய்யினை வேலவன் ஹைபர் மார்க்கெட் நிர்வாகமும் ஐந்தாவது வெற்றி பெரும் அணிக்கு 3-ஆயிரம் ரூபாயை லாரி செட் உரிமையாளரும் வழங்க இருக்கின்றனர்.