லாரி டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது

சத்தியில் லாரி டிரைவர் கொலை வழக்கில் தேடபட்டு வந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்

Update: 2024-03-21 06:13 GMT

ஈரோடு மாவட்டம் சத்தி வடக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் விக்கி (எ) விக்னேஷ் (31). லாரி டிரைவர், இவர், கடந்த பிப்ரவரி மாதம் 25-ம் தேதி அன்று வீட்டை விட்டு சென்றவர் எங்கே சென்றார் என தெரியாமல் விக்னேஷ் காணாமல் போனது குறித்து சத்தி போலீஸில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சத்தி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, சத்தி வடக்குப்பேட்டயைச் சேர்ந்த மச்சக் கொண்டை (எ) சசிக்குமாரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், சத்தி விஏஓ சபரிவாசனிடம் மச்சக்கெண்டை (எ) சசிக்குமார் (31) சரணடைந்தார்.அப்போது, முன்விரோதம் காரணமாக விக்னேஷைக் கொலை செய்ததாக சசிக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், தனது மாமனார் தேவராஜ் உள்ளிட்டவர்களின் உதவியுடன் விக்னேஷைக் கொலை செய்து, சத்தி காசிக்காடு ரோட்டில் பள்ளம் தோண்டி புதைத்தாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சத்தி போலீஸார் அப்பகுதிக்குச் சென்று, தாசில்தார் மாரிமுத்து முன்னிலையில், உடலைத் தோண்டி எடுத்தனர். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நந்தகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு மேற்கொண்டனர்.

விக்னேஷின் உறவினர்கள் மூலம் அவரது உடல்தான் என அப்போது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விக்னேஷின் உடல் சத்தி சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சசிகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான 6 பேரை சத்தி போலீஸார் தேடி வந்தனர்.

தேடப்பட்ட குற்றவாளிகல் சத்தி அருகே உள்ள ராமபைலூர் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக சக்தி இன்ஸ்பெக்டர் செல்வராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கு ஒரு வீட்டில் மறைந்து இருந்த 6 பேரை பிடித்து விசாரித்ததில் சத்தி வடக்குப்பேட்டையை சேர்ந்த சசிக்குமாரின் மாமனார் தேவராஜ் (55) சமையல் வேலை, அதே பகுதியைச் சேர்ந்த கன்மனி (27) சசிக்குமாரின் மனைவி, ஜபருல்லா (27), டீக்கடை தொழிலாளி, மோகன் ராஜ் (எ) முட்டைக்கண்ணன் (26), மில் தொழிலாளி, முத்து (எ) முத்துக்குமார் (25), மற்றும் சததி அத்தானி ரோடு, வண்டிப்பட்டறை பகுதியைச் சேர்ந்த மோகன் (25) பூ வேலை என தெரிய வந்தது இதையடுத்து பிடிபட்ட 6 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News