அண்ணாமலை தோற்றுவிடுவார் என விமர்சசனம்: கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி

அண்ணாமலை தோற்றுவிடுவார் என விமர்சசனம் செய்ததால் கைவிரலை பாஜக நிர்வாகி துண்டித்து கொண்டார்.

Update: 2024-04-18 13:26 GMT

கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி

கோவை:கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள் முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம்.இவர் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவராக இருந்து வருகின்றார்.கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் ஆதரவு திரட்டுவதற்காக 10 நாட்கள் முன்பு கோவை வந்தார்.

பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார்.நேற்று மாலை 5 மணி அளவில் இவர் பிரச்சாரத்தை முடித்த நிலையில் தனக்கு தெரிந்தவரிடம் அண்ணாமலை வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டுள்ளார். அண்ணாமலை தோற்று விடுவார் அவர் வெற்றி பெற வாய்ப்பு என குறைவு சொன்னதால் ஆவேசமடைந்த துரை ராமலிங்கம்,

அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்துக் கொண்டார்.இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.

இது குறித்து பேசிய துரை ராமலிங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன் .10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தேன்.அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது.எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன் என்றார். அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா பிரமுகர் கைவிரலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News