கனமழையால் பயிர்கள் சேதம் - வேளாண் அலுவலர்கள் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களை வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
Update: 2024-01-11 11:17 GMT
விராலிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை திடீரென கனமழை பெய்தது. இதில் மாத்துார், மண்டையூர், கத்தலுார், விராலிமலை, ஆவூர், நீர்பழனி,நாங்கு பட்டி, பேராம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின. பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதைத்தொடர்ந்து விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் அறிவுறுத்தலின்பேரில் வேளாண்மை உதவி அலுவலர்கள் பல்வேறு பகு திகளிலும் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.