சிவகங்கையில் 53,431 ஹெக்டேருக்கு பயிர் காப்பீடு - மாவட்ட நிர்வாகம் தகவல்
Update: 2023-11-28 02:22 GMT
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 15ஆம் தேதி வரை காப்பீட்டு தொகைக்கான பிரீமியம் தொகை பெறப்பட்டது. தொடர் விடுமுறை, இ சேவை மையங்களில் சர்வர் பழுது போன்ற காரணத்தால் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிவித்த நாட்களுக்குள் விவசாயிகள் பிரீமிய தொகையை கட்ட முடியவில்லை. இது நடத்து பிரீமிய தொகை கட்டுவதற்கான கால அவகாசம் நவம்பர் 22 வரை நீட்டிக்கப்பட்டது. இதில் 3.5 எக்டேர் வாழை, 6.29 எக்டேர் நிலக்கடலை, 53 ,413 எக்டேர் நெல், 8.52 எக்டேர் மிளகாய் என ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 92 ஆயிரத்து 963 விவசாயிகள் 53,431 எக்டேருக்கு பயிர் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை கட்டியுள்ளனர்.