கோயில்களில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்

புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட திருக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

Update: 2024-01-02 07:51 GMT

பக்தர்கள் 

ஆங்கில புத்தாண்டு தொடங்கி உள்ளதை ஒட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கி உள்ளது.ஆங்கில புத்தாண்டை ஒட்டி சுற்றுலா தளங்கள் கோவில்கள் கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளில் திரளான மக்கள் கூடி வருகின்றனர்.

அந்த வகையில் உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பட்டு அங்கி அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.சிறப்பு அலங்காரத்தில் காட்சி தரும் காஞ்சி காமாட்சியம்மனை கோவில் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாட்டின் படி பக்தர்கள் நெரிசல் இன்றி உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம்,வெளி மாநிலங்களில், இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதேபோல் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஏகாம்பரநாதர் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொள்ள திரளான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர். கேட்டவர்கெல்லாம் கேட்ட வரத்தை அளிக்கும் வல்லக்கோட்டை ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஆலயத்தில் காலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். உற்சவர் பட்டு அங்கி அலங்காரத்தில் மயில்வாகனத்தில் மயில் தோகைடன் எழுந்தருள பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பூரம் நட்சத்திரம் ஒட்டி இன்று 8 மணி அளவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் தங்க தேரில் எழுந்தருள கோயில் வளாகத்தில் வீதி உலா நடைபெற உள்ளது.

Tags:    

Similar News