காரில் எடுத்து வரப்பட்ட ₹76,500 பறிமுதல்
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் காரில் எடுத்து வரப்பட்ட ₹76,500 பறிமுதல்.
Update: 2024-04-04 06:15 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டி நெடுஞ்சாலை, மூலப்புதூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஆறு முகம் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரைநிறுத்தி சோதனையிட்டனர். அதில், உரிய ஆவ ணங்களின்றி ₹76,500 எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து, அந்த பணத்தை கைப்பற்றினர். பின்னர், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கூடுதல் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.