கடலூர்: ஒரே நாளில் 623 மனுக்கள் குவிந்தது
Update: 2023-11-21 02:44 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதம் தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோா், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மொத்தம் 623 மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.