கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
Update: 2023-12-13 01:04 GMT
மாவட்ட ஆட்சியர்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் பிற்பகல் 4.00 மணியளவில் உயர்கல்வித் துறை சார்பில் குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியிலும் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், விழாக்குழு இணைத்தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் சி. ஞானசேகரன் (விழாக்குழு உறுப்பினர்), பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.