பச்சைமலையில் உழவாரப்பணி: சிவனடியார்கள் பங்கேற்பு

பச்சைமலைப் பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் திரளான சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.

Update: 2024-05-07 15:53 GMT

உழவார பணியில் ஈடுபட்டவர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள. பொத்தனூர் கோப்பணம் பாளையம் மேற்கு வண்ணந்துறையில் உள்ள பச்சை மலைப் பகுதியில் உழவாரப்பணி நடைபெற்றது. ஈரோடு திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணி மற்றும் பரமத்தி வேலூர் ASK சிவனடியார்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,

பச்சை மலையினைச் சுற்றி பக்தர்கள் சிரமம் இல்லாமல் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக சிறப்பு உழவாரப்பணி மேற்கொண்டனர். காலை 6 மணிக்கு துவங்கிய உழவாரப்பணி மாலை 6 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஈரோடு, திருச்செங்கோடு, கந்தம்பாளையம், பரமத்தி வேலூர், பொன்மலர் பாளையம், நன்செய் இடையாறு,

மதுரை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு உளவாரப்பணி செய்தனர். மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த முள் செடிகள் மற்றும் புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் கோயில் தீர்த்த கிணற்றினை சுத்தம் செய்து பக்தர்கள் வழிபாட்டிற்காக ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் மற்றும் பரமத்திவேலூர் சிவனடியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News