மிட்டப்பள்ளியில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி பயிற்சி
மிட்டப்பள்ளியில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி முறை குறித்து பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பண்ணைப்பள்ளி பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் முனைவர் கருப்பையா தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண் விஞ்ஞானி முனைவர் கிருஷ்ணவேனி திருத்திய நெல் சாகுபடியில் ,விதை தேர்வு செய்தல், விதைப்பு, பருவம், பாரம்பரிய நெல் இரகங்களை சரியான பருவத்தில் நடவு செய்தல், கோடை உழவு செய்தல் அவசியம், நாற்றங்காலை தயார் செய்தல், நடவு வயலை தயார் செய்தல், நெல் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை முறைகுறித்தும்,
இயற்கை எருக்களை பயன்படுத்தலின் நன்மைகள், இயற்கை முறையில் பஞ்சகாவ்யா தயாரித்து பயன்படுத்துதல் அதன் நன்மைகள் குறித்தும், பாரம்பரிய நெல் இரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும் என கூறினார். வேளாண்மை அலுவலர் பிரபாவதி, வட்டார தொழில் நுட்ப மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் துறை சார்ந்த பல்வேறு கருத்துக்களை கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சாரதி,பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டதொகுப்பு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 25 கும், மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்..