சைபர் குற்றங்களை தடுக்க ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி

அதிகரித்துவரும் சைபர் குற்றங்கள் குறித்து ஊட்டியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2024-03-01 04:47 GMT

பேரணி

சில ஆண்டுகளாக நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2022ம் ஆண்டை விட 2023ம் ஆண்டு சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க தனி போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சைபர் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் இன்று நடந்தது. போலீஸ் எஸ்.பி., சுந்தரவடிவேல் தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி சென்றனர். ரயில் நிலையத்தில் தொடங்கி அரசுத் தாவரவியல் பூங்கா பழங்குடியினர் பண்பாட்டு மையம் அருகே நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் வங்கி மோசடிகளை தடுப்பது எப்படி என்பது குறித்தும், செல்போன் கோபுரம் அமைப்பதாக கூறி பண மோசடிகளை தடுப்பது குறித்தும் , எச்.எம்.எஸ்., ஓ.டி.பி., குற்றங்களை தடுப்பது குறித்தும், போலி முகநூல் மோசடி குறித்தும், குறைந்த விலையில் பொருட்கள் வாங்கி தருவதாக கூறும் மோசடியை தடுப்பது குறித்தும், கே.ஒய்.சி., புதுப்பித்து தருவதாக கூறி பண மோசடியை தடுப்பது குறித்தும், லோன் பெற்று தருவதாக கூறி பணம் மோசடிகள் தடுப்பது குறித்தும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் மோசடி தடுப்பது என்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News