100 சதவீதம் வாக்களிக்க வேண்டி சைக்கிள் பேரணி - எஸ்.பி. பங்கேற்பு
நாமக்கல் மக்களவை தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மிதிவண்டி (சைக்கிள்) பேரணியை தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித் கவுர் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக அனைவரும் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தேர்தல் நடைபெற இன்னும் 3 தினங்கள் மட்டுமே உள்ளது என்பதை நினைவூட்டும் விதமாக 3 கி.மீ தூரம் இப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டிய வாசகங்களை அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தி சென்றனர். இந்த சைக்கிள் பேரணியானது, நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய இப்பேரணி பரமத்தி சாலை, பூங்கா சாலை, உழவர் சந்தை, கோட்டை சாலை, நேதாஜி சிலை, கடை வீதி, பேருந்து நிலையம் வழியாக மீண்டும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் கு.செல்வராசு, காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், நகராட்சி ஆணையாளர் சென்னு கிருஷ்ணன், ரெட்கிராஸ் செயலர் சி.ஆர் இராஜேஸ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்