சேலத்தில் புத்தாக்க சூழலை மேம்படுத்த சைக்கிள் பேரணி

சேலத்தில் புத்தாக்க சூழலை மேம்படுத்த சைக்கிள் பேரணியை அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் டாக்டர் செந்தில்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்

Update: 2024-02-18 15:22 GMT

சைக்கிள் பேரணி தொடக்கி வைப்பு 

தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சேலம் வட்டார மையத்தின் சார்பாக இன்று புத்தாக்க சூழலை மேம்படுத்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புத்தொழில் நிறுவனங்களுக்கான மாநில தரவரிசை பட்டியலில் முதல்நிலை பிரிவில் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டதற்கு பங்குதாரர்களை கவுரவிக்கும் நோக்குடனும் மற்றும் புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேலும் மேம்படுத்துவதற்காக இந்த விழிப்புணர்வு பேரணி சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

பேரணியில் ஸ்டார்ட் அப் சேலம் வட்டார மைய ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். மாவட்ட தொழில்மைய இயக்குனர் சிவக்குமார் மற்றும் விநாயகமிஷன் ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் டீன் டாக்டர் செந்தில்குமார் பேரணியை தொடங்கி வைத்தனர்.

இந்த பேரணியில் சேலம் யங் இந்தியன் அமைப்பினர் சோனா இன்குபேஷன் அலுவலர்கள் மற்றும் 150-க்கும் மேலான ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்களை சேர்ந்தவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News