அணைகளின் நீர் இருப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
Update: 2024-01-19 03:40 GMT
நெல்லையில் தற்போது மழை பெய்யாத நிலையிலும் அணைகளின் நீர் வரத்து பரவலாகவே உள்ளது. அந்த வகையில் இன்று 19/01/24 காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர் இருப்பு 141.10 கன அடியாக உள்ளது.சேர்வலாறு அணையில் நீர் இருப்பு 143.27 கன அடியாக உள்ளது.மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு 117.72 கன அடியாக உள்ளது.கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பு 27 கன அடியாக உள்ளது.இவ்வாறு நீர் இருப்பின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.