தெப்பக்குளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

சிவகங்கையில் நகரின் மையப் பகுதியில் உல்ள தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவரின் அடிபகுதி சேதமுற்று தண்ணீரில் பெயர்ந்து விழுந்துள்ளது.

Update: 2023-12-25 16:04 GMT

சிவகங்கையில் நகரின் மையப் பகுதியில் உல்ள தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவரின் அடிபகுதி சேதமுற்று தண்ணீரில் பெயர்ந்து விழுந்துள்ளது.

சிவகங்கை நகரின் மையப் பகுதியான அரண்மனைக்கு அருகில் அமைந்துள்ளது தெப்பக்குளம். 10 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ள இத்தெப்பக்குளத்தில் நீர் நிறைந்து இருக்கும் போது நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து உப்பு தன்மையற்ற நீர் கிடைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பாரம்பரியமான இத்தெப்பக்குளத்தை கடந்த 1996 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையால் புனரமைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. தற்போது பெய்து வரும் பருவ மழையையால் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து குளம் நிறையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் சுற்று சுவரின் அடிபகுதி சேதமுற்று தண்ணீரில் பெயர்ந்து விழுந்துள்ளது. மேலும் பல பகுதிகள் விரிசிலுடன் காணப்படுவதால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சேதமடைந்த தெப்பக்குளத்தின் சுற்று சுவரை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News