சூறாவளி காற்றில் முறிந்து விழுந்த வாழை மரங்கள்

சங்ககிரி: சூறாவளி காற்றில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

Update: 2024-05-06 19:33 GMT

சேலம் மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் காவேரிப்பட்டி, அரசிராமணி, தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வீசிய சூறாவளி காற்றினால் காவேரிப்பட்டி கிராமம், தண்ணீர்தாசனூர் பகுதியில் இரு வேறு விவசாயநிலங்களில் நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் காய்கள் வந்தநிலையில் முறிந்து விழுந்து சேதமடைந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சூறாவளி காற்றினால் சேதமடைந்த மரங்களை வேளாண், வருவாய்த்துறையினர் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News