சொரப்பட்டு கிராமத்தில் பிரதான சாலை சேதம் - பொதுமக்கள் அவதி.
விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே சொரப்பட்டு கிராமம் அமைந்துள்ளது, இந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், ஒவ்வொரு பருவமழையின் போதும் இந்த கிராமத்திற்கு முருக்கேரியில் இருந்து செல்லும் பிரதான சாலையில் அமைந்திருந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிப்பு ஏற்படும், இதன் காரணமாக கிராமத்தின் வழியாக செல்லக்கூடிய சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகுந்த அவதியடைந்து வந்தனர்,
இந்த நிலையில் இந்த தரைப்பாலத்தை உயர் மட்டபாலமாக அமைப்பதற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மிகுந்த தொய்வுடன் நடைபெற்றதால் தற்போது பெய்த பருவ மழையினால் பாலத்தின் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த சாலையில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடியது, இதனால் இந்த வருடமும் சொப்ரபட்டு கிராம மக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள காயல்மேடு, தலைகாணி குப்பம், உப்பு வேலூர், தேவனந்தல், வங்காரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த மக்கள் அமைதி அடைந்துள்ளனர், மேலும் அந்த பாதத்திற்கு அருகாமையில் உள்ள மின்மாற்றியும் இடிந்துவிழும் அபாயத்தில் எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக பாலக்காட்டுமான பணிகளை துவங்க வேண்டும் எனவும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதையில் ஜல்லிகற்கள் கொண்டு பாதையை சீரமைக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.