மஞ்சள் பயிர்கள் சேதம்

திருநெல்வேலியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மஞ்சள் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

Update: 2023-12-28 02:12 GMT

திருநெல்வேலியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மஞ்சள் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. 

திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளம், சேந்திமங்களம், நாரணம்மாள்புரம், திருவண்ணாநாதபுரம் பொட்டல் ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள வயல்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி மஞ்சள் பயிரிடுவது வழக்கம். அதன்படி நிகழாண்டிலும் கிணறு மற்றும் குளத்தின் நீரை பயன்படுத்தி பயிரிட்டிருந்தனர். ஒரு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் கடந்த வாரத்தில் பெய்த தொடர் மழையால் மஞ்சள் பயிர்கள் மிகவும் சேதம் ஆகியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையில் மஞ்சள் குலை விற்பனை களைகட்டும். இதனை கருத்தில் கொண்டு சுமார் 3 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் சுற்றுவட்டார பகுதியில் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்தது. தொடர் மழையால் அந்தப் பயிர்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. சில இடங்களில் அதிக தண்ணீர் வயலில் தேங்கியதால் அழுகிவிட்டது. இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளோம். ஆகவே, அரசு முறையாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News