பொன்னேரி பஸ் நிலையத்தில் சேதமடைந்த கான்கிரீட் தளம்.

பொன்னேரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளம் சேதமடைந்துள்ளதால் பேருந்துகள் ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

Update: 2023-10-27 01:25 GMT

சேதமடைந்த கான்கிரீட் தளம்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொன்னேரி தேரடி தெருவில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம், திருவள்ளூர், பழவேற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு, 80க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையம் வளாகம் முழுதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கான்கிரீட் தளம் ஆங்காங்கே சேதமடைந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் உள்ளன. ஒரு சில இடங்களில் கான்கிரீட் கலவைகள் மேடும், பள்ளமாக உள்ளன. இதனால், நிலையத்திற்குள் வந்து செல்லும்போது, பேருந்துகள் தடுமாற்றம் அடைகின்றன. பள்ளங்களில் பேருந்துகள் சென்று வரும்போது புழுதியும் பறக்கிறது. இங்கு, கான்கிரீட் தளம் அமைத்து, 20 ஆண்டுகள் ஆன நிலையில், தொடர் பராமரிப்பு இன்றி உள்ளது. பொன்னேரி நகராட்சி நிர்வாகம் நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகளிடம் வரி வசூல் செய்து வரும் நிலையில், அவ்வப்போது பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News