நம்ம ஊரு திருவிழா - தேதி அறிவிப்பு

விருதுநகர் சங்கமம் - "நம்ம ஊர் திருவிழா" என்ற கலைத்திருவிழா ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்ததுள்ளார்.

Update: 2024-01-17 05:49 GMT
விருதுநகர் சங்கமம் - "நம்ம ஊர் திருவிழா" என்ற கலைத்திருவிழா ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு, விருதுநகர் சங்கமம் - "நம்ம ஊர் திருவிழா" என்ற கலைத்திருவிழா ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் மாலை 6 மணிமுதல் தொடங்கி இரவு 9மணி வரை நடைபெற இருக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13ஆம் தேதி சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஜன.14 முதல் ஜன.17 வரை சென்னையின் 18 இடங்கள் மற்றும் சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களிலும் நடைபெற உள்ளது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், 15.01.2024 அன்று சிவகாசி வெண்மணி கலைக்குழுவினர் மற்றும் மேட்டமலை அன்னை தப்பாட்டம் குழுவினர் மூலம் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ரத்தினம் நகரிலும், சந்தையூர் கிருஷ்ணசாமி தப்பாட்டம் குழுவினர் மற்றும் ஆண்டியாபுரம் முத்துவேம்பு தேவராட்டக்குழு மூலம் இராஜபாளையம், சங்கரன் கோவில் ரோட்டில் உள்ள ஜவகர் மைதானத்திலும், திருத்தங்கல் திரு.சரவணன் தப்பாட்டக்குழு மற்றும் படந்தால் திரு.பாண்டி கரகம், ஒயிலாட்டம் குழுவினர் மூலம் விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள வி.என்.ஆர் பூங்காவிலும், திருவில்லிபுத்தூர் புயல் தப்பாட்டக்கலைகுழுவின் மூலம் அருப்புக்கோட்டையில் அஜீஸ் நகர் பார்க் அருகிலும், வத்திராயிருப்பு திரு.துர்க்கையாண்டி கரகாட்டம் மற்றும் சிலம்பாட்டம் குழுவினர் மற்றும் விடியல் கிராமிய கலைக்குழுவினர் மூலம் கோவிந்த நகர், திருவில்லிபுத்தூரிலும், சாத்தூர் திரு.தங்கமுத்து நையாண்டி மேளம் கரகாட்டம் குழுவினர் மற்றும் திரு.கே.ரவிசந்திரன் நையாண்டிமேளம் மற்றும் கரகாட்டம் குழுவினர், காரியாபட்டி மூலம் சாத்தூர் பொரியார் பூங்காவிலும் நம்ம ஊர் திருவிழா கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், 16.01.2024 அன்று சிவகாசி வெண்மணி கலைக்குழுவினர் மற்றும் மேட்டமலை அன்னை தப்பாட்டம் குழுவினர் மூலம் சிவகாசி கார்நேசன் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிறுவர் பூங்காவிலும், சந்தையூர் கிருஷ்ணசாமி தப்பாட்டம் குழுவினர் மற்றும் ஆண்டியாபுரம் முத்துவேம்பு தேவராட்டக்குழு மூலம் இராஜபாளையம் மலையடிப்பட்டி, இரயில்வே ஸ்டேஷன் சாலை, டி.பி.ரோடு சந்திப்பிலும், திருத்தங்கல் திரு.சரவணன் தப்பாட்டக்குழு மற்றும் படந்தால் திரு.பாண்டி கரகம், ஒயிலாட்டம் குழுவினர் மூலம் விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்திலும், திருவில்லிபுத்தூர் புயல் தப்பாட்டக் கலைக்குழுவினர் மற்றும் இராஜபாளையம் திரு.வெங்கடேஷ் சிலம்பாட்டக்குழுவினர் மூலம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே மேல்நிலைப்பள்ளியிலும், வத்திராயிருப்பு திரு.துர்க்கையாண்டி கரகாட்டம் மற்றும் சிலம்பாட்டம் குழுவினர், மற்றும் விடியல் கிராமிய கலைக்குழுவினர் மூலம் முக்ராந்தல், பைபாஸ் ரோடு, சாத்தூரிலும், திரு.தங்கமுத்து நையாண்டி மேளம் கரகாட்டம் குழுவினர், சாத்தூர் மற்றும் திரு.கே.ரவிசந்திரன் நையாண்டிமேளம் மற்றும் கரகாட்டம் குழுவினர், காரியாபட்டி மூலம் பெரியார் நகர் பூங்கா, சாத்தூரிலும் நம்ம ஊர் திருவிழா கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நம் தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில், விருதுநகர் சங்கமம் 2024 நம்ம ஊர் திருவிழா கலைநிகழ்ச்சியை உங்கள் குழந்தைகளோடு கண்டு களித்து, நம் கலைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து இந்த பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.

Tags:    

Similar News