சிந்தனை நாள் விழிப்புணர்வு ஊர்வலம்
கள்ளக்குறிச்சி சாரண மாவட்டம் சார்பில், சாரண இயக்கத்தை நிறுவிய பேடன்பவுல் பிறந்த நாளையொட்டி சிந்தனை நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெறுகிறது.;
Update: 2024-02-24 09:51 GMT
ஊர்வலம்
கள்ளக்குறிச்சி சாரண மாவட்டம் சார்பில், சாரண இயக்கத்தை நிறுவிய பேடன்பவுல் பிறந்த நாளையொட்டி சிந்தனை நாள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய ஊர்வலத்தை உதவி தலைமையாசிரியை வசந்தா, சாரண இயக்க மாவட்ட செயலாளர் சூசை ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் பள்ளியின் சாரண, சாரணியர் இயக்க மாணவ, மாணவியர்கள் பங்கேற்று போதைப் பொருள் தடுப்பு, இயற்கையைக் காக்க மரக்கன்று நடுதல் ஆகியவற்றை வலியுறுத்தி நகரின் முக்கிய சாலை வழியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து அரசு ஆண்கள் பள்ளியில் நடந்த நிறைவு விழாவிற்கு தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். திருக்கோவிலுார் சாரண இயக்க பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.