பெண் குழந்தை உயிரிழப்பு - காவல்துறையினர் விசாரணை
மாரண்டஅள்ளி அருகே பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு மாரண்டஅள்ளி காவல்துறையினர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Update: 2024-03-17 09:05 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அருகேயுள்ள சாமனூர் சேர்ந்தவர் கிராமத்தைச் மூர்த்தி,கூலித் தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 25 நாட்களுக்கு முன்பு, சவுந்தர்யாவுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. நேற்று அந்த குழந்தைக்கு பால் கொடுத்த போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் குழந்தையை தட்டி விட்டு தூங்க வைத்துள்ளனர். இதையடுத்து சிறிது நேரம் கழித்து குழந்தையைபார்த்த போது மயங்கிய நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாரண்டஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தி ற்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது பற்றி மாரண்ட அள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.