தச்சு தொழிலாளி மரணம்
சிவந்திபுரம் சக்திநகரை சேர்ந்த தச்சுத் தொழிலாளி லஷ்மணன், சாலையில் நடந்து சென்ற பொழுது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Update: 2024-03-01 12:30 GMT
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் லஷ்மணன். தச்சு தொழிலாளியான இவர் நேற்று (பிப்.29) இரவு சாலையில் நடந்து சென்ற பொழுது தீடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து விகேபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.