விஜயகாந்த் மறைவு - சோழத்தரத்தில் அஞ்சலி
காட்டுமன்னார்கோவில் அருகே சோழத்தரம் பகுதியில் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.;
Update: 2023-12-29 06:23 GMT
அஞ்சலி
தேமுதிக நிறுவனத் தலைவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் மற்றும் விருத்தாசலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழத்தரம் பகுதியில் விஜயகாந்த் படத்திற்கு பொதுமக்கள் மற்றும் கேப்டன் ரசிகர் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.