விஜயகாந்த் மறைவு - தேமுதிகவினர் திருப்பூரில் அஞ்சலி
திருப்பூரில் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி தேமுதிக நிர்வாகிகள் நினைவஞ்சலி செலுத்தினர்.;
Update: 2023-12-29 01:37 GMT
அஞ்சலி
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருப்பூர் கே வி ஆர் நகர் பகுதியில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல் அறிவுறுத்தலின் பேரில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா முகமது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பரதன், ராஜா, மகாலிங்கம் மகாலிங்கம் , அருண்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.இதேபோல் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் தேமுதிக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.