குமரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் 

குமரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்.;

Update: 2024-03-23 07:08 GMT

பால ஜனாதிபதி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக இருப்பவர் பால ஜனாதிபதி. இவர் அய்யா வைகுண்டர் குறித்து கவர்னர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி இருந்தார். மேலும் பிரதமர் மோடி மதத்தை கூறி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார், எனவே அவர் மீது தேர்தல் ஆணையம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.      

Advertisement

இந்த நிலையில் பால ஜனாதிபதிக்கு பதிவு தபால் மூலம் மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் மிகவும் ஆபாசமாக அவரை விமர்சித்து இருப்பதுடன், குடும்பத்துடன் கொல்வோம் என மிரட்டி உள்ளனர். இது குறித்து அவர் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  எனக்கு மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளார்கள். நான் இந்த மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன். இதைப் போன்று பல மிரட்டல்களை நான் பார்த்து உள்ளேன். எனது கருத்திலிருந்து பின் வாங்க மாட்டேன் என்றார். மேலும் அய்யாவழி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் அவர்களின் எண்ணம் பலிக்காது என கூறினார்.

Tags:    

Similar News