மனைவிக்கு கொலை மிரட்டல் - கணவன் கைது
கோவில்பட்டியில் மதுபோதையில் மனைவியை அரிவாள்மனையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-01-16 06:27 GMT
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் சங்கரபாண்டியன். இவரது மனைவி மாரீஸ்வரி . சங்கரபாண்டியன் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வாராம். இந்நிலையில் சம்பவத்தன்று மாரீஸ்வரி, அவரது மகள் ஆகிய இருவரும் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மது போதையில் வந்த சங்கரபாண்டியன் அவதூறாகப் பேசி அரிவாள் மணையை மாரீஸ்வரி மீது வீசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த மாரீஸ்வரி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார்வழக்குப் பதிந்து, சங்கர பாண்டியனை கைது செய்தனா்.