ஏரியில் தவறி விழுந்தவர் பலி
திருத்தணி, கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்தவர் குமார், 42. ஏரியில் மீன்பிடிக்க சென்ற போது, கால் தவறி தண்ணீரில் விழுந்தத நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Update: 2024-03-14 08:24 GMT
திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்தவர் குமார், 42. இவர், கடந்த 3ம் தேதி எஸ்.அக்ரஹாரம் ஏரியில் மீன்பிடிக்க சென்ற போது, ஏரிக்கரையில் இருந்து கால் தவறி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவ்வழியாக சென்றவர்கள் குமாரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.