நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்

பழனி கோயில் கிரிவலப் பாதை நகராட்சிக்கு சொந்தமா? கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமா ? என நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்.

Update: 2024-06-19 11:58 GMT

நகர்மன்ற கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் இன்று நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது புதன்கிழமை மதியம் 1 மணியளவில் நடைபெற்ற விவாதத்தில் பழனி கோவில் கிரிவலப் பாதை முழுவதும் ஆக்கிரப்புகள் அகற்றப்பட்டு பின்னர் கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத அளவிற்கு அடைக்கப்பட்டது. இந்த நிலையில் பழனி நகராட்சிக்கு உட்பட்டது தான் கிரிவல பாதையா ? அல்லது கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்டது தான் கிரிவலப் பாதையா? என்று கடுமையான காரசார விவாதம் நடைபெற்றது. இதில் கிரிவலப் பாதையை 1948 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் கோவில் நிர்வாகத்திற்கு கொடுக்கப்பட்டதாகவும் அதில் கிரிவலப் பாதையை பக்தர்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கவும் பொதுமக்கள் சென்றுவர தடை இருக்கக்கூடாது என்றும் கிரிவலப் பாதையை எந்தவிதமான அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்ற நிலை உடன்படிக்கை படியே கிரிவல பாதை ஒப்படைக்கபட்டதாக தெரிவித்து கவுன்சிலர்கள் கடும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அடிவாரம் அய்யம்புள்ளி சாலை சன்னதி வீதிகளில் தடுப்பு அமைத்து பொதுமக்கள் வாகன தடைவித்துள்ள கோவில் நிர்வாகத்தை கண்டித்து தடுப்புகளை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் முடிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News