புதிய உச்சத்தை தொட்ட இந்திய குடும்பங்களின் கடன்!

Update: 2024-04-09 07:12 GMT

புதிய உச்சத்தை தொட்ட கடன் 

இந்திய குடும்பங்களின் கடன் மதிப்புகள் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 40% என்ற அளவுக்கு உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.

அதே சமயம் குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்புகளும் குறைந்துள்ளதாக, முன்னணி இந்திய நிதி நிறுவனமான Motilal Oswal ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிட்டால் இந்திய குடும்பங்களின் நிகர நிதிச் சேமிப்புகள் வெறும் 5% என்கிற அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில் குடும்பங்களின் செலவீனங்கள் மற்றும் முதலீடுகள் என இரண்டும் கணிசமாக பலவீனமடைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News