கடன் வசதியாக்கல் நாள் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கடன் வசதியாக்கல் நாள் பிப்.23ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Update: 2024-02-17 07:27 GMT
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கடன் வசதியாக்கல் நாள் பிப்.23ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில் கடன் வசதியாக்கல் நாள் பிப்.23ம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் கடைபிடித்திடுமாறு தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கடன் வசதியாக்கல் நாள் பிப்.23ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.