புஞ்சை புளியம்பட்டி வார சந்தையில் கால்நடைகள் வரத்து சரிவு
மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறை கெடுபிடிகளால் புஞ்சை புளியம்பட்டி வார சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்தது.
புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கால்நடை சந்தை நடைபெறும் இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார் சுமார் ரூ 1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகும்.
இந்த நிலையில் நேற்று கூடிய புஞ்சைபுளியம்பட்டி வார சந்தைக்கு குறைவான மாடுகளை கொண்டுவரப்பட்டன இந்த நாள் உள்ளூர் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த நாட்டு மாடுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டன இது குறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் ஏழு நாட்களே உள்ளது .
இதனால் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வது தடுக்க தேர்தல் பறக்கும் பட்டின தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக கால்நடை சந்தைக்கு மாடுகளை வாங்க விற்க வரும் வியாபாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வராததால் கால்நடைகளின் வரத்து குறைந்தது என்றனர்