மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு !

சேலம் மாவட்டம். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 610 கன அடியிலிருந்து 158 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2024-03-18 05:29 GMT

மேட்டூர் அணை

சேலம் மாவட்டம். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 610 கன அடியிலிருந்து 158 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறையுமாக இருந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 610 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 158 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 61.81அடியாகவும், நீர் இருப்பு 26.05 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News