முள்ளங்கி வரத்து சரிவால் விலை உயர்வு
தர்மபுரி சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முள்ளங்கி வரத்து சரிந்ததால், விலை அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர், கம்பைநல்லூர், மொரப்பூர், சிந்தப்பாடி, தென்கரை கோட்டை, சில்லாரஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பள வில் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். அறுவ டைக்கு பின் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு முள்ளங்கி விலை கிலோ 25க்கு விற்பனையானது. தற்போது உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால், முள்ளங்கி வரத்து குறைந்தது.
இதனால் கடத்தூர் மார்க்கெட் பகுதிகளில் முள்ளங்கி விலை அதிக ரித்து, கிலோ 25 முதல் 30க்கு விற்பனை செய் யப்பட்டது. இதே போல் மாவட்டத்தில் உள்ள மற்ற மார்க்கெட் பகுதிக ளிலும் முள்ளங்கி விலை அதிகரிக்க தொடங்கியது. மாவட்டத்தில் தொடர் மழை காரண மாக முள்ளங்கி அதிக மழையால் தற்போது, கிலோ 40க்கு விற்பனை செய்யப்படுகிறது. முள் ளங்கி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.