பயிர் காப்பீட்டிற்கு சான்று பெறத் தாமதம் - விவசாயிகள் போராட்டம்

Update: 2023-11-09 00:45 GMT
விவசாயிகள் போராட்டம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், பயிர்க் காப்பீடு செய்வதில் சான்று கிடைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்திய விவசாயிகளை பூதலூர் வட்டாட்சியர் அழைத்து பேசினார். பூதலூர் வட்டாரத்தில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராக உள்ளனர். தண்ணீர் வர தாமதப்படும் சூழ்நிலையில் எப்படியாக இருந்தாலும் தண்ணீர் பற்றாக்குறை தொடருமானாலும் நடவு செய்யவோ அல்லது தெளிப்பு மூலமோ விவசாயம் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நம்பிக்கையோடு பயிர் செய்ய, பயிர்க் காப்பீடு செய்வதற்கு வருவாய் கிராம அலுவலர்கள் சான்று வழங்கினால் தான் காப்பீடு செய்ய முடியும். அரசு அறிவித்தும், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும் சான்று வழங்குவதில் தாமதப்படுத்தப்படுவதை கண்டிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை காலை பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரளும் போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கோரிக்கைகள் வட்டாட்சியரிடம் முன் வைக்கப்பட்டது. பூதலூர் வட்டாரத்தில் 2023-24 ம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் புதுப்பிக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்திட நவம்பர் 15 ஆம் தேதியோடு முடிவடைவதால் பிரிமியம் செலுத்தி பதிவு செய்ய ஏதுவாக மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தும் காலதாமதப்படுத்துவதற்கு எதிராக காலதாமதமின்றி சான்று வழங்கிடக் கோரிக்கைகளோடு பூதலூர் வட்டாட்சியர் மரியம் ஜோசப்பை சந்தித்து சான்று வழங்க கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவிப்பு செய்திட கோரப்பட்டது. வட்டாட்சியர் கிராம நிர்வாக அதிகாரிகள் கூட்டம் உடன் நடத்தி விவசாயிகளுக்கு உதவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததோடு, நடவடிக்கையும் மேற்கொண்டார் . இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழரசன், த.வி.ச ஒன்றியத் தலைவர் பாலசுப்ரமணியன், த.வி.ச ஒன்றிய பொருளாளர் அறிவழகன், வி.தொ.ச ஒன்றியக்குழு ராஜகோபால், விவசாய சங்க பிரதிநிதிகள் ரமேஸ், சுந்தரவடிவேல், சிபிஎம் ஒன்றியக்குழு சரவணன், வாலிபர் சங்கம் அறிவழகன், தவிச ஒன்றிய துணைச் செயலாளர் பாரதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றியக்குழு கார்த்தி, ஒன்றிய பொருளாளர் முருகன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News