எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் சுற்றுவட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை

திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் சுற்றுவட்ட மேம்பாலம் அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் வலியுறுத்தினார்.;

Update: 2024-01-31 13:33 GMT

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 23வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், பிப்ரவரி 27ஆம் தேதி முதல் திருச்சி குழுமாயி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவிற்கு கூடுவார்கள். ஆகையால் முன்னதாக இந்த பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும்.

Advertisement

பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்க வேண்டும். 23வது வார்டில் காந்திபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 7 குறுக்குத் சாலைகள் சேர்ப்பதற்காக மேயர், ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் இந்த பகுதி பாதாள சாக்கடை திட்டத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இந்த காந்திபுரம் குறுக்கு சாலை பகுதிகளில் எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. திருச்சி நீதிமன்றம் அருகே எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானாவில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் உள்ளது. ஆகையால் அரிஸ்டோ பகுதியில் அமைக்கப்பட்டது போல் சுற்றுவட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். அப்போது தான் இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி தீரும் என்றார்.

Tags:    

Similar News